317
யாழில் வீசும் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. யாழில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்றது. அந்நிலையில் நீர்வேலி , கோப்பாய் , புன்னாலைக்கட்டுவான் , உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வாழை தோட்டங்கள் அழிவடைந்துள்ளன.
பல வாழைகள் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. வாழை குலைகள் முற்ற முதல் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். #கடும்காற்று #வாழை
—
Spread the love