163
பாறுக் ஷிஹான்
காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து இறந்த ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று சனிக்கிழமை(23) முற்பகல் இடம்பெற்ற நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் மேலும் தனது கருத்தில்
கடந்த வியாழக்கிழமை அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து நோய்வாய்ப்பட்டு இறந்ததாக ஒரு ராணுவ வீரரை திருக்கோயில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்திருந்தார்கள் அந்த ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்த தருணத்தில் இராணுவத்தினரால் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மூச்சுவிட சிரமப்பட்டு இருந்ததாகவும் நெஞ்சுக்கு பிரச்சினையை காணப்பட்டதாகவும் வைத்திய சாலைக்கு இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டதை உறுதிப்படுத்தி இருந்தனர்.
எனினும் உண்மையில் அந்த இராணுவ வீரருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்திருக்கலாம் என எழுந்த சந்தேகத்தை அடிப்படையில் அந்த இராணுவ வீரரின் உடலை நாங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் பத்திரப்படுத்தி மருத்துவ ஆய்விற்காக மாதிரிகளை உரிய பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தோம் . அந்த அறிக்கையின் அடிப்படையில் இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு கிடைத்தது அதனைத் தொடர்ந்து அங்கு காணப்பட்ட பதற்ற நிலைமைக்கு தெளிவு பிறந்திருக்கிறது.
மேலும் இறந்த இராணுவ வீரர் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த காலங்களில் சேவையாற்றியவர் எனவும் அதற்காக அவருக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார். #காஞ்சிரங்குடா #இராணுவமுகாம் #கொரோனா
Spread the love