அன்னிய செலாவணி கையிருப்பை சரிசெய்வதற்காக இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இலங்கையில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். இதன்போது கொரோனாவை கட்டுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதார பாதிப்பை சீர்செய்யவும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக மோடி உறுதியளித்திருந்தார்.
அதன்போது கோத்தாபய ராஜபக்ஸ கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் ஏற்பட்டுள்ள அன்னிய செலாவணி கையிருப்பு சரிந்து வருவதால், பின்னர் திரும்ப பெற்றுக்கொள்ளும் முறையில், இந்தியா 8 ஆயிரத்து 360 கோடி ரூபா வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சார்க் மாநாட்டின்போது, இந்தியாவிடம் கேட்டிருந்த 3 ஆயிரத்து 40 கோடி ரூபாவுடன் சேர்த்து இந்த பணத்தையும் வழங்குமாறு கோத்தாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை கட்டுமான பணியை விரைவுபடுத்துமாறு இந்திய நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோத்தாபய ராஜபக்ஸ மோடியிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இலங்கை #இந்தியா #அன்னியசெலாவணி #கோத்தாபய