நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்க போருக்கான ஆயத்த நிலையில் இருக்குமாறு அந்நாட்டு ராணுவத்திற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். சீன ராணுவம் பயிற்சியைக் கூட்ட வேண்டும் எனவும் எந்த ஒரு மோசமான சூழலுக்கும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சீன ஜனாதிபதி ; தற்போது இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க ரோந்துக் கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
அத்துடன் கொரோனாவைப் பரப்பியது சீனாதான் என அமெரிக்காவும், அமெரிக்காதான் என சீனாவும் மாறி மாறிக் குற்றம்சுமத்திவரும் நிலையில் அமெரிக்கா , சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பலநாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான போர் முழக்கமாக சீன ஜனாதிபதியின்; இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2வது மிகப்பெரிய ராணுவத்தைக் சீனா கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #போர் #ஆயத்தநிலை #சீனஜனாதிபதி #கொரோனா