நியூசிலாந்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக புதிதாக கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. அந்நாட்டில் உள்ள ஒக்லாந்து நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 98 வயதான மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில், நியூசிலாந்தில் கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர்தான் சமூக பரவல் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் அதன்பின்னர் அம்மாதிரியான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் நியூசிலாந்தின் சுகாதாரத்துறையின் இயக்குநரான ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாளை முதல் நியூசிலாந்தில் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை பத்தில் இருந்து 100-ஆக அதிகரிக்கப்பட உள்ளதுடன் அவுஸ்திரேலியாவுடனான எல்லை வரும் ஜுலை முதல் திறக்கக்கூடும் எனவும் நியூசிலாந்து அரசு குறிப்பிட்டுள்ளது. #நியூசிலாந்து #கொரோனா #அவுஸ்திரேலியா