166
இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த 5 பேரில் மூவர் மாலைதீவில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் இருவர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இதுவரை வரை 781 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 770 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Spread the love