கொரோனாவினால் உலக நாடுகள் திக்குமுக்காடி வரும் நிலையில் கொங்கோவின் வங்கத்தா மண்டலத்தில் புதிய எபோலா வைரஸ் தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையத்து அங்கு அச்சம் நிலவி வருகிறது.
இதுவரை 6 பேருக்கு எபோலா கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இதனையடுத்து ‘கோவிட்-19 மட்டும் இந்த உலகை அச்ச்றுத்தும் நோய் அல்ல எபோலா உள்ளிட்ட இன்னும் சில வைரஸ் அச்சுறுத்துல்களும் உள்ளன’ என உலகச் சுகாதார அமைப்பின் டெட்ரோஸ் அதனம் கேப்ரியேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இப்போதைக்கு கொரோனா மீது நம் கவனம் இருந்தாலும் உலகச் சுகாதார அமைப்பு இதே போன்ற பிற மக்கள் தொற்று நோய் மீதும் தீவிர கண்காணிப்புக் கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொங்கோ விலங்குகள் பண்ணைகளில் எபோலா வைரஸ் உள்ளது எனவும் அது அந்நாட்டின் பல பகுதிகளிலும் தாக்கும் ; நிலை உள்ளது எனவும் உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
1976-ல் கொங்கோவில் எபோலா வைரஸ் முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் இது அங்கு 11வது எபோலா வைரஸ் தாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது #கொங்கோ #எபோலா #கொரோனா