188
தெல்லிப்பளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் , வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை காவல்துறை பிரிவுக்குள் உள்ள மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோல் குண்டுகள் இரண்டு , ஐந்து பொலித்தீன் பைகளில் கட்
குறித்த பகுதியால் இராணுவத்தினர் சுற்றுக்காவலுக்கு (ரோந்து) சென்ற போது மயான பகுதியில் இருந்த சில இளைஞர்கள் இராணுவத்தினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் இராணுவத்தினர் அவ்விடத்தில் சோதனை நடத்திய போதே குறித்த பொருட்களை மீட்டு , தெல்லிப்பளை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love