கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ள குறித்த அதிகாரி இராஜதந்திர சிறப்புரிமையின்; கீழ் பரிசோதனையை மேற்கொள்ளாது வெளியேற அனுமதிக்கப்பட்டதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் ரஜிவ் சூரியஆராச்சி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு தமது இராஜதந்திர பணியாளர்கள் செல்லும்; போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகள், தரங்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. #PCR #அமெரிக்கதூதரகஅதிகாரி