169
நாவற்குழி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் எனும் குற்றசாட்டில் 10 இளைஞர்களை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாவற்குழி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டு இருந்த போது , காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களையும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்ற காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இளைஞர்களை கடுமையாக எச்சரித்து , காவல்துறை பிணையில் விடுவித்துள்ளனர்.
அதேவேளை இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது இளைஞர்களின் வீடுகள் அருகாமையில் இருந்தமையால் பெற்றோர்கள் வந்து பிள்ளைகளை மன்னித்து விடும்படி கேட்ட போதும் காவல்துறையினர் அதற்கு இணங்காமல் அவர்களை காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்ட போது அவ்விடத்தில் சிறு பதட்டம் நிலவிய போதிலும் , காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணையின் பின்னர் விடுவிப்போம் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து பதட்டம் தணிந்தது என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். #நாவற்குழி #ஊரடங்கு #இளைஞர்கள் #கைது #பிணை
Spread the love