(நாவற்குடா மாரியம்மன் ஆலயச்சடங்கினை அடிப்படையாகக் கொண்ட பார்வை)
சடங்குகள் தாய்வழிச்சமுகத்தின் எச்சத்தின் தொடர்ச்சியைப் பேணுவதாகவும் அதேவேளைஆண்நிலைக்கருத்தாக்கங்களைமையப்படுத்தியதொன்றாகவும் உள்ளது.இவை மக்கள் வாழ்வியலைப் பேசுபவையாகவும் வரலாற்றினைக் கொண்டவையாகவுமுள்ளன.
மட்டக்களப்பில் வைகாசிதொடக்கம் ஆனிவரையிலானகாலப்பகுதிகளில் சடங்குகள் தொடங்குகின்;றன.இச் சடங்குகள் பத்ததிஃபத்தாசி முறை கொண்டு செய்யப்படுபவையாகும். மாரி,காளி,கண்ணகை,திரௌபதைபோன்றபெண் தெய்வங்;களுக்;கு சடங்குகள்செய்யப்பட்டுவருகின்றது. வெப்பநிலைஅதிகமாகும் காலப்பகுதியில் பெண்தெய்வங்களைகுளிரச்செய்வதற்காய் வெப்பத்தினைகோபத்தினைதணிப்பதற்காய் இச் சடங்குகள் செய்யப்படுவதாகவும் சடங்குகள் செய்யப்படாதவிடத்துமாரிமுத்துக்களைஅள்ளிஎறிந்துவிடுவாள் என்றும் குளிர்த்திபாடிமுடிந்தால் வெப்பந்தணிந்துவிடும் மழைபெய்யும் என்னும் நம்பிக்கைமக்களிடையேகாணப்படுகின்றது.
இச்சடங்குக் காலங்களில் மக்களுக்குபாணக்கம் என்னும் முக்கனிகளால் தயாரிக்கப்பட்டதீர்த்தம் வழங்கப்படுகின்றது. இத்தீர்த்தம் உடற்சூட்டை தணித்து உடல்வெப்பசமநிலையைப் பேணுவதாய் உள்ளது. அத்துடன் கோயில் வேம்பு, கமுகு,தாளை, வாகை, போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டுஅலங்கரிக்கப்படும். கோயில்ச்சூழல் என்பதுமக்களை வெப்பத்தினால் ஏற்படும் நோய்களிலிருந்து காப்பதற்கான வழிவகையாக உள்ளது.இங்கு சடங்கு மக்களை இணைக்கவும் சமுகமாய் சேர்ந்துசெயற்படவும் அத்துடன்ஆளுமைவிருத்தி,ஆற்றுப்படுத்தல்,மனிதருடன் மனிதர்சேர்ந்தியங்குதல் தனிமைப்படுத்தலைதவீர்த்தல்என்பதன் வாயிலாக மனித உளவியல் தேவைகளையும் நிறைவு செய்வதாய் சமுகத்தில் இயங்குகின்றது.
நாவற்குடாப் பகுதியில் கண்ணகை,மாரியம்மன் ஆலயங்கள் முக்கியமானவை. மாரியின் இன்னொருஅவதாரமாகவேகண்ணகைபாhர்க்கப்படுகின்றாள். இரு பெண் தெய்வங்களும் கோபம்,அச்சுறுத்தல்,வெப்பம்தணித்தல்,குளிரச்செய்தல் என்னும் தன்மைகொண்டதாய் காணப்படுகின்றனர். தெய்வங்களின் உண்மைத்தன்மையினையும் பூசகர்களின் ஆளுமையை தீர்மானிப்பதாகவும் மந்திரங்கள் மூலம் தெய்வம் கட்டுப்படுவதும் படுகளம் போடுவதும் அதனை வெட்டி பூசகர் சடங்கினை நடத்துதல் வேண்டு;ம். சடங்குக் கோயில் கதவு வருடம் ஒருமுறை திறக்கப்படும். இதனைகதவுதிறத்தல் எனபார்கள். இதனையொட்டி’பேயாடிப்பந்தல் பிரித்தல்’என்னும் பழமொழி பழக்கத்திலுள்ளது.
சடங்கில் பேயாடுதல்,கட்டுச்சொல்லுதல்,படுகளம்போடுதல்,உருவேற்றுதல்,கட்டு-வெட்டுபோன்ற தமிழ் மந்திரங்களைஅடிப்படையாகக்கொண்ட செயற்பாடுகளும்கும்பம் மடைபோன்றவையும்முக்கியமானவை. இவற்றில் முக்கனிகள்,தாமரை,கமுகு,தாளைபோன்றவைமுக்கியஇடம்பெறும். சடங்குகளில் பலிச்சடங்கு,கன்னிமார்பிடித்தல்,நெல்லுக்குத்துச் சடங்கு,குளிர்த்திப்பாடல்,சக்கரையமுது,பள்ளையம் போன்றவைமுக்கியமானவை. ஓவ்வொருநாட்ச்சடங்கிலும் பாணக்கம் என்னும் பாணம் வழங்கப்படும். இவைகோமயம்,கோசலம், இளநீர்,சக்கரை,முக்கனிகள் கொண்டுதயாரிக்கப்பட்டுதீர்த்தமாகவழங்கப்படுகின்றது. இதனைக்கொண்டேகுளிர்த்தியும் ஆடப்படுகின்றது. குளிர்த்தியாடலில் வழங்கப்படும் பாணக்கம் நோய் தீர்க்கும் மருந்தாகமக்களால் எடுத்துச் செல்வதுமுக்கியநம்பிக்கையாகஉள்ளது.
இறுதி நாளன்றுகுளிர்த்திச்சடங்குசெய்யப்படும்;பொங்கலுக்கானஅரிசினைத் தயாரித்தல் நெல்லுக்குத்தல் சடங்காகும். கோயில் முன்றலில் மரஉரல் நட்டுபூசாரி,தெய்வம் ஆடுபவர்கள் அனைவரும் இணைந்துநெல்லினைக் குத்தபின்னர்வெளிமுன்றலில் உரல்நட்டுப்பெண்கள் அனைவரும் நெல்லினைக் குத்தி அரிசாக்குவார்கள். சக்கரையமுது, பள்ளையத்திற்கு கன்னிகள்பிடித்தல்எனப் பருவம் எய்தாதகுழந்தைகளைதெய்வம் பிடிக்கும் இவர்கள் கோயில் கதவு பூ10ட்டும் வரைகோயிலிலேதங்குவார்கள். அவர்களைப் பார்ப்பதற்காய் மாதவிடாய் நின்றபெண்கள்தெய்வம் ஆடுபவர்களால் தெரிவுசெய்யப்படுவார்கள். இறுதிநாளன்று தெரிவுசெய்யப்பட்ட பெண் குழந்தைகளைஅதிகாலைப் பொழுதில் அலங்கரித்துக் கோயிலின் உள்ளேஅவர்களைஅம்மனாகப் பாவித்துகன்னிகளுக்குப் படையல் செய்வார்கள். இச்சடங்குகன்னிமார்வழிபாட்டுடன்தொடர்புபடுத்திஆய்வுசெய்வதற்கான மூலங்களைக் கொண்டுள்ளது.
குளிர்த்திச் சடங்கில் தலைமைப் பூசாரிதன்னை அம்மனாகப்பாவித்து சேலை உடுத்தி அலங்கரித்து முகக்களையுடன் குளிர்த்திப்பந்தலுக்கு வருவார். குளிர்த்திப்பந்தல் என்பது முக்கனிகளாலும் கொடிமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அப்பந்தலில் நடுவில் மரஉரல் வைக்கப்பட்டிருக்கும் உரலின் மேல் பாணக்கம்நி; ரப்பப்பட்ட பானைவைக்கப்பட்டு குளிர்த்தி பாடப்படும். ஓவ்வொருபாடல் முடிவிலும் பூசாரிதன்னைஅம்மனாகப் பாவித்துவேம்பு,வில்வம்,விளாத்தி சேர்த்துக் கட்டியகுழையினால் பாணக்;கத்தினைஅள்ளி தன்மேலும் பார்த்திருப்போர்மீதும் விசிறுவார். குளிர்த்தி ஆடிமுடிந்ததும்அம்மாளை கோயிலின் உள்ளே கொண்டு சென்று பூசைசெய்தபின்னர் தீர்த்தம் ஆட கடலுக்குச் சென்றுவந்தபின்னர் கும்பம் சொரிவார்கள். அத்துடன் வைத்தமடைஅம்மாளுக்கான அலங்காரங்கள் எல்லாம் களையப்பட்டுஆலயம் மூடப்படும்.’வெளவால் உறையும் கோயில்’ என சடங்குக் கோயிலினை அழைக்கும் வழக்கமுண்டு.
சடங்குப்பண்பாடென்பதுசமுகவாழ்தலைஅதன் மூலமான அறிவுமரபினை பின்பற்றுபவையாக உள்ளது. மனிதர்களின்; சூழல் சார்ந்தஅறிவு,கடவுள் தொடர்பானநம்பிக்கை, உணவுமுறையியல், உள்ளுர்ப்பொருளாதாரம் போன்றஅறிவுமரபினைக் உட்கொண்டதாய் காணப்படுகின்றன. மரபு என்பது ஒரு சமுகம் சேமித்து வைத்துள்ள அறிவின் வரலாறு ஆகும். இது கடந்த காலத்தினை பிரதிபலிப்பதாகவும் நிகழ்காலத்திற்கு தேவையானவற்றைப் பெற்று செயற்படுவதன் மூலம் தன்னை கட்டமைத்துக் கொள்கின்றது
மட்டக்களப்பில் பெண்தெய்வச் சடங்குகள்; தாய்வழிச்சமுக எச்சங்களின் தொடர்ச்சியைப் பேணும் பண்பாட்டின் தொடர்ச்சியாய் செயற்படுகின்றன. ‘ஒரு சமூகத்தில் சில வழக்கங்கள், கூறுகள்,பகுதிகள் போன்ற எந்த ஒன்றும் பல காலகட்டங்களைக் கடந்து செல்லும் போது அவற்றின் செயல்கள் இழக்க நேரிடும். சில சூழல்களில் செயலிழந்த கூறுகள் நிகழ்காலத்தில் நிகழ்வுகளில் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும். அவையே எஞ்சிநிலைத்தவை ஆகும்’ (எட்வர்ட் பர்னட் டைலர்)குறிப்பாக நாவற்குடா மாரியம்மன் கோயில்ச் சடங்குகளில்; பெண் வேடமணிந்து சடங்குகள் செய்தல் சடங்கிற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் வளமையுடன் இணைந்தவையாக காணப்படு;தல். நெல், நீர் வைக்கப்படும் கும்பம், குங்குமம், மஞ்சள் இவை பெண் இனப்பபெருக்கம், மாதவிடாய்போன்றவற்றுடன் இணைந்தவையாக உள்ளன.காளி, மாரி, பேச்சி போன்ற தெய்வங்களுக்கு உரு ஏறி ஆடும் ஆண்கள் தங்களைப் பெண்ணாகப்பாவித்து வேடஉடை புரிந்து ஆடுவதும் பேசும் போது ‘மகனே’ எனத் தன்னை தாயாகப்பாவனை செய்து பேசுவதும் இடம்பெறுகின்றது. பூசாரியும் தன்னை பெண்ணாகப்பாவித்து சடங்குகளைச் செய்கின்றார். சேலை உடுத்தி அலங்கரித்து அம்மனுக்குரிய நகைகள் அணிந்தே சடங்குகள் செய்கின்றார்.
இத்தகைய பெண்தெய்வச் சடங்குகளில் பெண்களின் பங்குபற்றல் என்பது சிக்கலானது. பெண்களின் பங்கபெற்றல் என்பது துப்பரவு செய்பவராக, துணிதுவைப்பவராக உள்ளது. பூசைப்பொருட்கள்,புனிதப்பொருட்களைத் தொடமுடியாது. தொடும் பட்சத்தல் தீட்டுக்குரியதாக நம்பப்படுகின்றது. பெண் உடல் தீட்டு என அர்த்தப்படுத்துவோமால் அதிலிருந்து விளைந்த மனிதர்களும்; தீட்டுக்குரியவர்களே.ஆனால் பெண் உடல் மட்டுமே தீட்டின் உச்சமாகவும் அதேவேளை வணக்கத்திற்குரியதாகவும் பண்பாட்டில் எதிர்மறை உறவுகொண்டதாய் காணப்படுகின்றது.
மனிதவரலாற்றில் ஆரம்ப வேட்டைக்கால வரலாற்;றினை தாய்வழிச்சமுகமாய் அடையாளப்படுத்தப்படுகின்றனர். தாயே முதன்மையானவளாய் மக்கள் குழுக்களை வழிநடத்துபவளாகக் காணப்பட்டாள். ஆரம்பகால சமூகத்தில் குழந்தைகள் தாயை மட்டுமே அறிந்திருந்தனர். குழந்தை பிறப்பு, பராமரிப்பு, குழந்தைகளை வாழவைத்தல் என்பன அவளது தேவையாய் காணப்பட்டது. வேட்டையாடவும் உணவுசேகரிக்கவும் தொடங்கினாள். குடியிருப்புகளில் குழந்தைகள் தாயை அறிந்திருந்தனர். ஆண்கள் இவற்றுடன் இணைக்கப்பட்டவராய் காணப்பட்டனர். அச்சமூகம் பெண்களால் மட்டுமே புதிய உயிரை உருவாக்க முடியும். பெண்களே மூலகாரணம் என நம்பினர்.; இத்தகைய தாய்வழிச்சமூகம் என்பது பெண்னை மையமாகக் கொண்ட சமூக அமைப்பாகக் காணப்பட்டது.
இவற்றையொட்டி நம்பிக்கைகள்,தொன்மங்கள், வழிபாடுகள் தோற்றம் பெற்றன. தாந்தரீக வழிபாட்டில் இதற்கு சான்றாக உள்ளன. ‘ கன்னிமை எல்லாவற்றையும் பிறப்பித்தவள். பெரிய மார்புகளை உடையவள். போன்ற அடிப்படைப்பண்பு பெண் தெய்வத்திற்குரிய அடிப்படைப்பண்புகளாயின.'(செல்வி திருச்சந்திரன்., தமிழ் வரலாற்றுப்படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு) குழந்தைப்பேறு என்பது பெண்-ஆண் இணைந்ததே என்னும் உயிரியல் புரிதல் தந்தைவழிச்சமூக உருவாக்கத்திற்கு அடிப்படையானது. ஆண் தன்னை முன்னிறுத்திய காலமாக வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கின்றனர். ‘ஆண் உறுப்பும் அதனுடைய உருவவடிவில் மதிப்புள்ள லிங்கம் சுமார் 35000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகத்தை ஆட்கொள்ளத் தொடங்கிய தந்தைவழிச்சமூக உருவாக்கம் ஆரம்பத்தில் லிங்க வடிவிலான சின்னங்கள் தலைகாட்டின.'(ராதாகிருஷ்ணன்,வி(மொழி)., உலகவரலாற்றில் பெண்கள்)தந்தைவழிச்சமூகத்தில் மனிதர் நிலையாக வாழத்தொடங்குவதற்கு இயற்கையில் தன் உழைப்பினைச் செலுத்த முனைகின்றனர். இங்கு உழைப்பு என்பது முக்கியம் பெறுகின்றது. உழைப்பு குடும்ப உருவாக்கத்திற்கு அடிப்படையாகின்றது. உபரினைப் பெருக்க உழைப்பினைப் பெருக்;க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இங்கு குழந்தை உற்பத்தி என்பது அத்தியாவசியத் தேவையாகின்றது. சொத்துக்களைப் பாதுகாக்கவும் பேணவும் வாரிசி உருவாக்கமும் அவ்வாரிசுக்கான அடையாளமும் தேவையாகின்றது இத்தேவையே ஆண்நிலைச் சமூக உருவாக்கத்தினை சமூகப்பண்பாட்டில் வலுப்பெறவைத்தது. பெண்ணை பாதுகாக்கபட வேண்டியவளாய் மாற்றியது. வாரிசுகள் தந்தையின் அடையாளமாகினார்கள். பெண்ணின் மாதவிடாய்க்காலம், குழந்தைப்பேறு என்பன தீட்டாய் கருத்துருவாக்கம் பெற்றது.
இச்சமூக மாற்றம் ஆண்தன்னை தலைவனாய் அரசனாய் கடவுளாய் கட்டமைப்புச் செய்தான். எல்லா அதிகாரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஆண் மூலாதாரனம் என்னும் தொன்மம் உருவாக்கப்படலாயிற்று. பெண் தீட்டுக்குரியவளாய் மாற்றப்பட்டாள். ‘உலகில் எல்லாப் பெண்களுக்கும் தனது கணவனைத்தவிர வேறுகடவுளில்லை. அவள் செய்யக் கூடிய எல்லா நற்பணிகளிலும் மிகவும் சிறப்பானது முழுநிறைவான கீPழ்படிதலை அவனுக்குச் செய்வதாகும்’ (காமகல்ப)இயற்கையின் ஒரு பகுதியாக சமூகத்தினை பாதுகாக்ககூடியவளாகவும் வழிநடத்துபவளாகவும் கருதப்பட்டவள் ஒரு கருப்பையினைத்தவிர வேறுஎதுவுமற்றவளாக தாழ்த்தப்பட்டாள்.மோட்சத்திற்கும் இறைவழிபாட்டிற்கும் தடையானவளாக உடல் உள ரீதியாக ஒடுக்குதலுக்குள்ளாக்கப்பட்டாள்.
கன்னிமார் பிடித்தல் பருவம் எய்தாத பெண்களை தெரிவு செய்தல். இவர்களை பாதுகாக்க மாதவிடாய் நின்ற பெண்களை தெரிவு செய்தல். மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் கோயிலினுள் செல்ல முடியாது. நெல்லுக்குத்துச் சடங்கில் பெண்கள் பங்கேற்க முடியாது. உடலியல் ரீதியான செயற்பாடு தொடக்கு தீட்டாகப்பார்க்கப்பட்டது. கோயில் நிர்வாகத்தில் பெண்கள் பங்கு பெற்ற முடியாது. இத்தகைய பெண்ணின் வகிபங்கு சிந்தித்தலுக்கும் விவாதத்திற்குமுரியது.
கோயில்ச்சடங்கு என்பது மனித வாழ்வில் அவசியமானது. மனிதரை கூட்டாகச் செயற்படவும் மரபுகளைப் பரிமாறவும் மனிதர் தொடர்ந்தும் செயற்படவும் தூண்டுகின்றது.இத்தன்மை கொண்ட சடங்குகள்ஆண்நிலைக் கருத்தியல் சார்ந்து செயற்படுபவைகளாய் உள்ளன. இவை சார்ந்த உரையாடலை ஏற்படுத்துவதும் செயற்படுவதும் வன்முறையற்ற சமூக உருவாக்கதின் தேவையாகும்.
கலாவதி கலைமகள்