162
ஆராதனைகளை மேற்கொள்வதற்காக தேவாலயங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய வரையறுக்கப்பட்ட மக்களுடன் ஆராதனைகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் வீட்டிலிருந்தே பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கிறிஸ்தவ மக்கள் வேண்டப்பட்டிருந்ததாக கொழும்பு பேராயர் கூறியுள்ளார்.
Spread the love