உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்து, 15 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக அமெரிக்காவும் அதற்கடுத்தபடியாக பிரித்தானியாவும் உள்ளன.
பிரித்தானியாவில் 40,625 பேர் கொரோனாவால் உயிரிழத்துள்ள நிலையில் இன்று முதல் பிரித்தானியாவிற்குள் வரும் பயணிகள் புதிய விதிகளின் கீழ் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
எனவே பிரித்தானியாவிற்குள் விமானம் மூலமாகவோ புகையிரதம் மூலமாகவோ பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்பவர்கள் விமானநிலையத்திலேயே தங்கள் வீட்டு முகவரியை கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்பதுடன் 14 நாட்களுக்குள் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது எனவும் விதிகளை மீறுபவர்களிடம் 1000 பவுண்டுகள் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் ; அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
அதேவேளை சில விமான நிறுவனங்கள் இது சட்டவிரோத மற்றும் பயனற்றவை என விவரித்துள்ளன. . பிரிட்டிஷ் ஏர்வேஸ், ரியானைர் மற்றும் ஈஸிஜெட் ஆகியன இந்த நடடிக்கைக்கு எதிராக , சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்கித்துள்ளன.
மேலும் மூன்று விமான நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ‘இந்த நடவடிக்கைகள் பிரித்தானிய குடிமக்கள் மற்றும் பிரித்தரினயாவுக்குள் வரும் சர்வதேச மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் நியாயமற்ற செயல் எனவும் தெரிவித்துள்ளன. #பிரித்தானியா #பயணிகள் #தனிமைப்படுத்தப்பட #கொரோனா