என்ன வாழ்க்கடா இது? கொரோனா நம்மல அப்படியே அழிச்சடும் போல இருக்கே இதற்கு தீர்வே இல்லையா? இப்படி நினைப்பது நியாயம் தான். ஆனால் மனித இனமானது இன்று இந்த சிறிய வைரசுக்கே பயப்படுகிறது. மனிதா? ஓன்றை யோசி நீ பயப்படப் பிறந்தவன் அல்ல. ஒரு பொருளை அதன் அழகு சிதையாமல் மெருகூட்டி உற்பத்தி செய்கின்ற அதே நேரம் அப் பொருளை அழிப்பதற்கான கருவியையும் கண்டு பிடித்துள்ளாய். நாம் இதுவரை இன்னோரென்ன அனர்த்தங்களுக்கு முகங் கொடுத்து பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்தது நினைவில்லையா மனிதா? யோசி பழைய நினைவுகளை குழி தோண்டி புதைத்து விட்டாயா? மேல் எடு மனிதா? உண்மைகள் புரியும். இலங்கையில் ஏற்பட்ட 30 வருட யுத்தம். இரானுவத்தில் எண்ணிறைந்த வீரர்கள் உயிரை தியாகம் செய்தனர்இ ஏராளமானோர் அங்கவீனமடைந்தனர். மேலும் கடந்த வருடம் ஏப்ரல், உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் இவற்றிலிருந்து மீண்டு இன ஐக்கியத்தை ஏற்படுத்தவில்லையா? மேலும் 2004 டிசம்பர்; 26 சுனாமி (துறைமுக அலை) பல சூழலியல் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த போதும் அவற்றை திருத்தி முன்பு என்றும் இல்லாத படி வளர்ச்சியைக் காணவில்லையா?
ஆக கொரோனாவும் இதைப் போல பல நீங்கா வடுக்களை எமது மனங்களில் பதித்துள்ளது. இல்லை என்று கூறவில்லை. கண் முன் நிகழும் இவ்வாறான உயிரிழப்புகள் பெரிதாய்ப்;;படுகின்ற உனக்கு மனக் கண்ணில் விளங்கும் சந்தோசம் புரியவில்லையா? அல்லது நினைக்க மனம் வரவில்லையா? கொரோனா பல நல்ல விடயங்களை சூழலிலும் உறவுகளிலும் ஏற்படுத்தியுள்ளது. என்பதை யாராலும் தட்டிக்கழிக்க முடியாது.
சூழலியல் ரீதியான நன்மைகளை நோக்கும் போது வாகனங்கள் ஓடாததினால் நைட்ரஜன் டயக்சைட் அளவு குறைந்துள்ளது. காற்று மாசு குறைந்துள்ளது. இதனால் சுத்தமான சுவாசக்காற்றை நாம் இன்று சுவாசிக்கின்றோம். மரங்கள் எல்லாம் வானளவு வளர்;ச்சியடைந்து கிளைகளைப் பரப்பி நிற்கின்றன. கப்பல் படகு மீன்பிடி எதுவுமே இல்லாமல் ஆற்று நீர், கடல் நீர் தெளிந்துள்ளது. கொண்டோலா படகு பார்த்திருப்பீர்கள் அதன் துடுப்புகள் அடிக்காத வெனிஸ் நகர வாய்க்கால் நீரை அப்படியே பருகலாம் என தோன்றுகிறது. அன்னப் பறவைகள் எல்லாம் அப்படியே வலம் வருகின்றன. மேலும் இத்தாலி கடற்கரையோரத்தில் மனித நடமாட்டம் இல்லாமையால் ஆழ்கடலில் வசித்து வந்த டொல்பீன்கள் கரை வந்துள்ளது. அமைதியான சிங்கப்பூரை நாம் பார்க்கின்றோம். வீதியோரங்களில் நீர் நாய்கள் துள்ளி விளையாடுவதைக் காணலாம்.
குடும்ப வாழ்வியல் ரீதியான மாற்றங்களாக, நாம் கடந்த 03 மாத காலமாக ஊரடங்கு என்ற பெயரில் வீட்டிலேயே இருக்கின்றோம். நாம் தான் இருக்கின்றோமா? அல்லது எமது ஆத்மாக்களா? கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம்தான். ஏன் என்றால் ஒரே வேளை யாரைப்பார்த்தாலும் நேரமில்லை தொலைத்தொடர்பு சாதனங்களிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரன் இருக்கானா? அல்லது இறந்து விட்டானா? என்பதைக் கூட கவனிக்க நேரமில்லை. ஒரு அப்பாவுக்கு பணம் உழைப்பதுதான் வாழ்க்கை. இதை விட வேறு என்ன வேண்டும்? என கேட்கும் தந்தை தனது சிறார்களை முத்தமிட மழலைகளை கொஞ்ச மறுத்த உதடுகள். கூட்டு குடும்ப வாழ்க்கை மீண்டும் வருமா? என ஏங்கும் பாட்டி பாட்டன். இளமைக் காலத்தில் நான் விளையாடிய விளையாட்டை நினைக்கத்தான் முடிகிறது. மீண்டும் அந்தக் காலம் வரமாட்டாதா? என ஏங்கும் அண்ணா அக்காமார்கள். எங்களுக்கு எதுவுமே வேண்டாம். அன்பான வார்த்தைகளைத் தவிர என ஏங்கும் சிறார்கள்.
தரிசு நிலங்களாகவுள்ள எங்களையும் பசுமை தரைகளாக மாற்ற மாட்டார்களா? என நினைக்கும் பூமியின் கதறல். எங்களையும் வாழ விடுங்கள் நாங்கள் ஏன் அழிக்கப்படுகிறோம். என தெரியவில்லை என ஏங்கும் விலங்குகள். குடும்ப பிரச்சினைகளின் போது தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு கலந்துரையாடி முடிவு காண நேரம் கிடைக்கவில்லையே? அதற்கொரு நேரம் கிடைக்காதா? என தவிக்கும் உறவுகள். தான் பெற்ற மகனைப் பார்த்தே ஆறாண்டுகள்; கழிந்து விட்டனவே என் மகன்கள் உலகின் மோகப் பொருளால் பல திசைகளிலும் பரவி வாழ்கின்றனரே எனது இறுதி கிரியைகளில் கூட என்னைப் பார்க்க மாட்டானான்களா? என ஏங்கும் தாய்மை. மேலும் திருமணம் முடித்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் எங்களுக்குள் புரிந்துணர்வு இல்லையே நேரம் ஒதுக்குங்கள் கணவரே பேசி ஒரு முடிவுக்கு வருவோம். என என்னும் ஒரு மனைவியின் அவலக்குரல்;. தொழிலுக்கு செல் பரவாயில்லை. பெண்ணிலைவாதம் பேசி நான் தான் பெரியவள் என எண்ணும் மனைவியரை எவ்வாறு அறிவுரை கூறி இரு கை தட்டினால் தான் ஓசை வரும். என எவ்வாறு புரியப்படுத்துவது. என ஏங்கும் கணவன்மார்;. மற்றும் பணம் இல்லாமல் கூட வாழ்ந்திடலாம். சந்தோசம் இல்லாமல் வாழவே முடியாது. இதை எப்படி இளைய தலைமுறையினருக்கு ஏத்திவைப்பது. என எண்ணும் அனுபவ தாத்தா பாட்டிகள்.
இவ்வாறான பல அவலக் குரல்களை கேட்டிருப்பான் அந்த இறைவன் அதனால்தான் என்னவோ கொரோனா வந்துள்ளது. என நினைக்க தோன்றுகிறது. இவ் உலக மக்கள் அனைவருக்கும் மீண்டும் தமது ஆடம்பரமில்லா, அவசரமில்லா, நீயா? நானா? . என்ற போட்டியில்லா, பணம் என்னடா பணம். மனிதன்தானடா முக்கியம். என எண்ணும் வகையில் இந்த கொரோனா பல படிப்பினைகளையும் நீங்கா சந்தோசத்தையும் அளித்துள்ளது. இது இறைவன் அளித்த கொடையல்லவா? மனிதா? இன்பத்தில் பிறந்து இன்பத்தில் மடிபவன் யாருமில்லை. துன்பத்தில் பிறந்து துன்பத்தில் மடிபவன் யாருமில்லை. நினைவில் வைத்துக்கொள். தற்போது நாம் காண்கின்ற இந்த சூழல் ஆஹா ஆஹா இவ்வளவு நாள் .இதை மறந்தா வாழ்ந்தோம். என எண்ணுகையில் நாவால் தேன் சொட்டுகிறது.
நாட்டின் பல்வேறு இடங்களில் வசித்து வந்த உறவுகள் இன்று ஒரு வீட்டில் பக்கத்து வீட்டுக்காரனின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் அயல் வீட்டுக்காரர்கள். மழலைகளை தூக்கி கொஞ்சும் உறவுகள். தொலைத்தொடர்பு சாதனம் அல்ல தொல்லைத் தொடர்பு சாதனம், தூரமாகி விட்டன. தொலை உறவுகள் அண்மித்து விட்டன. உடலுக்கு ஆரோக்கியமாம் ஓடி .ஆடி விளையாடுவது என புத்தகத்தில் படித்துள்ளேன். தற்போதுதான் நேரில் பார்க்கும் காட்சி கிடைத்துள்ளது. அருமை அருமை என்னவொரு வீட்டுத்தோட்டம், புத்தம் புதிய காய்கறிகள், வீதியோரங்களில் காடுகளில் தனது இனத்தை பெருக்கி சந்தோசமாக திரியும் விலங்குகள் எம்மை நோக்கி கை கூப்பி நிற்கின்றன. எங்களை வாழ வைத்ததற்கு நன்றிகள் கோடி என்று .
இனி தீர்வே இல்லை என தட்டிக்கழிக்கப்பட்ட பிரச்சினைகள் அரங்கேறி மன்னிப்புக் கேட்கும் உறவுகள். எனது இறுதி மரணச்சடங்கில் என்னை புதைக்க ஒரு மகன் கூட பக்கத்தில் இல்லையே என ஏங்கிய எமது முதியோர். அன்பு மழையில் நனைந்து இன்று மரணத்தைக் கூட மறந்து விட்டார்கள். அன்று பேசப்படாத பல பிரச்சினைகளும் பேசி தீர்க்கப்பட்டு விவாகரத்து குறைந்துள்ளது. பெண் என்பவள் மென்மையானவள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் குடும்ப வாழ்வில் இரு கண்கள் மாதிரி என என்னும் தாய்மார்கள் ஆகா தாய்க்குலம் மாறினால் முழு சமுதாயமே மாறுமல்லவா?
நல்லதொரு விடுமுறை. மாற்றம் ஒன்றே மாறாதது இதுவும் கடந்து போகும். மனிதா எதுவும் நிலையில்லை. உன் குடும்பத்தைத் தவிர வாழ்க்கையை சந்தோசமாக வாழ கற்றுக்கொள் இதுவொரு அறிய வாய்ப்பாகும். சந்தோசமான நினைவுகள் தான் உன்னை மென்மேலும் ஒரு சாதனையாளனாக மாற்றும்.
யூனுஸ் பாத்திமா சுமைமா
கலை கலாசாரப் பீடம்
இரண்டாம் வருடம்
கிழக்கு பல்கலைக்கழகம்