ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தபட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கினை எதிர்வரும செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளது.
எக்னெலிகொடவைக் கடத்தியமை மற்றும் தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் இராணுவத்தில் லெப்டினன் கேணல் பதவிநிலை வகிக்கும் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எழுவருக்கு எதிரான வழக்கினையே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு நேற்றையதினம் தீர்மானித்துள்ளது.
எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவின் சாட்சியத்துடன், இவ்வழக்குக்கான சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென, வழக்கு தொடர்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், மன்றில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #எக்னெலிகொட #கடத்தபட்டு#காணாமல்ஆக்கப்பட்டமை #விசாரணை