181
யாழில் ஹெரோயின் போதை பொருளை கடத்தி சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணிற்கும் சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபருக்கும் இடையில் தொடர்பிருப்பதும் காவல்துறையினரினால் கண்டறியப்படுள்ளது.
யாழ்.அரியாலை பூம்புகார் பகுதியிலையே இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , பூம்புகார் பகுதியில் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது , அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டர் சைக்கிளில் வைத்திய சாலை ஊழியர்கள் போன்று மருத்துவ குறியீட்டு ஸ்ரிக்கர் ஒட்டியவாறு பயணித்த பெண்ணை மறித்து சோதனையிட்ட போதே போதை பொருளை அவரது உடமையில் இருந்து மீட்டனர்.
அதனை அடுத்து அப்பெண்ணை கைது செய்த புலனாய்வாளர்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த போது , போதை பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபருடன் குறித்த பெண்ணுக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்நிலையில் பெண்ணை தொடர்ந்து காவலில் வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #ஹெரோயின் #போதைப்பொருள் #கைது #அரியாலை #மருத்துவகுறியீட்டுஸ்ரிக்கர்
Spread the love