எதிர்வரும் 23 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு ரோஹித்த போகொல்லாகமவுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தான் அரசியல் பழிவாங்களுக்குள்ளானதாக ரோஹித்த போகொல்லாகமாவினால் குறித்த ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரிடம் விசாரணைகள் மேற்கொள்வதற்காக இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது
இதேவேளை, அவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
தமது நிறுவனத்தை முறைக்கேடாக கையகப்படுத்தியமையால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் நிசங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் பதிவு செய்திருந்த முறைப்பாடு தொடர்பிலேயே இவ்வாறு அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். #ஜனாதிபதிஆணைக்குழு #ரோஹித்த #அழைப்பாணை #நிசங்கசேனாதிபதி