178
ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு நிகழ்வு மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பிரம்ம சிறி ஐங்கசர சர்மா தலைமையில் மன்னார் கீரி கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றது.
சங்கிலிய மன்னனுடைய நிழல் படத்திற்கு மாலை அணிவித்து விசேட பூஜை வழிபாடுகள் எழுத்தூர் அம்மன் கோவில் பிரதம குரு விஜயபாகு வினால் நாடத்தப்பட்டு சிரார்த்த சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் கிரிகை பொருட்கள் அனைத்தும் கடலில் கரைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த கிரிகை நிகழ்வில் தேசிய சைவ மக்கள் கட்சியில் உறுப்பினர்கள் இந்து இளைஞர்கள் உற்பட பலரும் கலந்து கொண்டு சங்கிலிய மன்னனுடைய திருவுருவபடத்திற்க்கு மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. #ஈழத்து #தமிழ்மன்னன் #சங்கிலியன் #அஞ்சலி
Spread the love