185
கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் அளித்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத் தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பில் இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரர், நாளைய தினம் (15) இரண்டாவது தடவையாக ஆணைக்குழு முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #உயிர்த்தஞாயிறு #தாக்குதல் #ஞானசாரதேரர் #ஜனாதிபதிஆணைக்குழு
Spread the love