பாகிஸ்தானில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சில்வதேஷ் பால் எனும் வாகன ஓட்டுநர் மற்றும் தவாமு பிரகாமு எனும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய திருப்பமாக அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் சிக்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தானில் இரு இந்திய தூதரக அதிகாரிகள் காணாமல் போயுள்ளனர் :
Jun 15, 2020 at 07:13
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பணி புரிந்த இரு இந்திய தூதரக அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு இரண்டு பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரிகள் உளவு பார்த்தாக குற்றம்சுமத்தி, இந்தியா அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் இரண்டு இந்திய அதிகாரிகள் காணாமல் போயுள்ளமையானது அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இரு உயர் தூதரக அதிகாரிகளும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்பவர்களுக்கு விசா வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்கள் இருவருமே இந்திய அரசின் முக்கிய ஆவணம் ஒன்றை கைப்பற்ற முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #பாகிஸ்தான் #இந்திய #தூதரகஅதிகாரிகள் #காணாமல்