167
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக இருந்த அனுஷா சிவராஜா கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் இதனை உறுதிப்படுத்தினார்.
கொட்டகல சீ.எல்.எப் வளாகத்தில் இன்று (17) இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாட்டின் போது நிர்வாக சபையின் ஆலோசனைக்கு ஏற்ப இந்த புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.
Spread the love