180
லடாக் கல்வான் (Galwan) எல்லைப் பகுதியில் சீன படையினருடன் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 5 தசாப்தங்களின் பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற பாரிய மோதலாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சீன படையினருடனான மோதலில் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாக இந்திய இராணுவம் நேற்று அறிவித்திருந்தது.
இந்தநிலையில், மோதலில் படுகாயமடைந்த 17 வீரர்கள் பலியாகியதாக இந்திய இராணுவம் பின்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love