இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2003 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது இதுவே முதன்முறையாகும்.
இந்தியாவில் ஆறாவது நாளாக, கொரோனா வைரஸ் பாதிப்பு 10,000த்தை கடந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, ‘10,974 பேருக்கு ஒரே நாளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,54,065 ஆக அதிகரித்துள்ளது,.
இதுவரை இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2003 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 52.79 சதவிகிதம், அதாவது 1,86,934 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 1,55,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் 1,406 பேர் பலியாகியுள்ளனர். #இந்தியா #கொரோனா #பலி