Home இலங்கை ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உண்போம்

ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உண்போம்

by admin
ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உண்போம்”  எனும் தொனிப்பொருளில் இலங்கை போசணையாளர் சங்கம், கல்வி அமைச்சுடன் இணைந்து சித்திர போட்டி ஒன்றினை நடாத்தப்படவுள்ளது .
போசணை மனித வாழ்வில் இன்றியமையாததாகும். இந்த போட்டியானது பாடசாலை மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கவனத்துடன் உண்ண வேண்டும் என்பதை உணர வைக்கும் நோக்குடனையே இந்த போட்டி நடத்தப்படவுள்ளது.
இந்த போட்டியானது பாடசாலை மாணவர்களிடையே வகை 1 : தரம் 1 – 5 , வகை 2 : தரம் 6 – 9 , வகை 3 : தரம் 10 -13 ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படவுள்ளது.போட்டியில் 1ம் பரிசு  6000 ரூபாய், 2ம் பரிசு 4500 ரூபாய் , 3ம் பரிசு  3500 ரூபாய் மற்றும் 10 சாதாரன பரிசுகள்  வழங்கப்படவுள்ளதுடன்,  வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

வெற்றி பெற்ற ஓவியமானது இலங்கை போசணையாளர் சங்கத்தினதும் , கல்வி அமைச்சினதும் வலைத்தளம் மற்றும் அவற்றின் பதிப்புகளிலும் பிரசுரிக்கப்படும் .

போட்டியின் அறிவுறுத்தல், விதிமுறைகள்  மற்றும் நிபந்தனைகள்

ஓவியங்கள் A3 ( 11.7 x 16.5 inches ) அளவு தாள்களில் வரையப்படவேண்டும். அனுமதிக்கப்பட்ட வரைய பாவிக்கக்கூடிய பொருட்களாவன பஸ்டல் ( Pastel) , நீர் வண்ணங்கள் ( water colours ) , சுவரொட்டி நிற  வண்ணங்கள் ( poster colours ) , மற்றும் எண்ணெய் வண்ணங்கள் ( Oil paints). டிஜிட்டல் ஓவியங்கள் மற்றும் படத்தொகுப்பு ஓவியங்கள் ( collage photos ) அனுமதிக்கப்படமாட்டாது. எல்லா ஓவியங்களும் “ ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உண்போம் ” என்ற தொனிப்பொருளிலேயே இருக்க வேண்டும்.

ஓவியத்தின் பின்புறத்தில் பின்வரும் விபரங்கள் காணப்பட வேண்டும் உங்கள் ஓவியத்திற்கான தலைப்பு , முழுப்பெயர் , பிறந்த திகதி , வயது , உங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி இலக்கம் , வகை , பாடசாலை மற்றும் தரம், ஓவியம் உங்களுடையது என்பதை  உறுதிப்படுத்த பெற்றோர் / பாதுகாவலர் / வகுப்பு ஆசிரியர் / பாடசாலை அதிபரினதோ கையொப்பம்.

நல்ல தரமான போட்டோவாகவோ ( high quality photograph ) அல்லது ஸ்கேன்  பிரதியாகவோ ( scanned copy ) உங்கள் ஓவியத்தையும் ஓவியத்தின் பின்புறத்தையும் 2020 ஆடி மாதம் 30 ம் திகதியிலோ / அதற்கு முன்னராகவோ [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். ,

வெற்றியாளர்கள் தமது ஓவியங்களின் மூலப்பிரதிகளை அனுப்ப பின்னர் அறிவிக்கப்படும் .

மேலதிக விபரங்களுக்கு ஹசங்கா  ரத்னாயக்க ( 0718154005 / 0779120130 ) தொடர்பு கொள்ளவும்  #ஆரோக்கியமான #இலங்கைபோசணையாளர்சங்கம் #கல்விஅமைச்சு #போசணை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More