217
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால் பதில் காவல்துறைமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, முன்னாள் பிரதமரின் ஆலோசகராக செயற்பட்ட எஸ்.பாஸ்கரலிங்கம் மற்றும் முன்னாள் வங்கி அதிகாரி ஒருவரிடமும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் வாங்குமூலம் பதிவு செய்யுமாறும் காவல்துறைமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. #மைத்திரிபால #ரணில் #வாக்குமூலம் #மத்தியவங்கி
Spread the love