158
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான தரவன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பனை மர காட்டில் இன்று சனிக்கிழமை (20) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதான நீர் பம்பிகள் அமைந்துள்ள தரவன்கோட்டைப் பகுதியில் உள்ள பனங்காட்டிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தினால் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் தீயில் எரிந்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் நகர சபையின் தீயணைப்பு பௌசர் மூலம் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதே வேளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உடனடியாக வவுனியாவிலிருந்து தீயணைப்பு வாகனத்தை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் அதிகளவான பயன் தரும் பனை மரங்கள் தீயில் எரிந்துள்ளது.தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.சம்ப இடத்திற்குச் சென்ற மன்னார் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #மன்னார் #தரவன்கோட்டை #தீவிபத்து #பனைமரங்கள்
Spread the love