உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த திட்டமிட்ட சஹ்ரான் ஹசீம், படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி புரிந்தாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆணைக்குழுவில் நேற்று (22.06.20) முதல் இன்று அதிகாலை 1 மணிவரை அவர் ஆணைக்குழு முன் வாக்கு மூலம் வழங்கிய முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஒருவர் , 2018 ஆம் ஆண்டு சஹ்ரான் ஹசீம் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றதாகவும், அதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் உதவி புரிந்தாகவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரிப்கான் பதியூதீன் ஆட்கடத்தல் வியாபாரம் உள்ளிட்ட பல வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளாதாக கொழும்பின் ஊடக தகவல் கூறுகின்றது.