தாய்லாந்தில் கொரோனா வைரசுக்கு எதிராக குரங்குகளிடம் நடத்தப்பட்ட தடுப்பூசி சோதனை வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு உள்ளன. அந்தவகையில் தாய்லாந்தும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இந்த தடுப்பூசி முதற்கட்டமாக கடந்த மாதம் 23ம் திகதி குரங்குகளுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டதில் வெற்றி அடைந்து உள்ளதாகவும் தடுப்பூசி போடப்பட்ட குரங்குகள் அனைத்தும் எவ்வித பக்க விளைவுகளும் இன்றி நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த குரங்குகளுக்கு 2வது கட்ட பரிசோதனைக்காக நேற்று 2-வது டோஸ் மருந்து ஏற்றப்பட்டது. இந்த சோதனையும் வெற்றி பெற்றால் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என தாய்லாந்து அறிவியல், உயர்கல்வி, ஆய்வுத்துறை அமைச்சர் சுவிட் மாய்சின்சீ தெரிவித்துள்ளார். #தாய்லாந்து #கொரோனா #தடுப்பூசி #வெற்றி