228
யாழ்.மாநகர சபை சட்ட ஆலோசகர், சபையின் எதிர்ப்பினால் நீக்கப்பட்டுள்ளார். யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகராக சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் கடமையாற்றி வந்தார். அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ்,தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவர் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் , தனது முகநூல் உள்ளிட்டவற்றில் ,மாநகர சபை தொடர்பிலும் , அதன் உறுப்பினர்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவதூறுகளையும் முன் வைப்பதாக சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டு , அவரை மாநகர சபை சட்ட ஆலோசகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அதற்காகமைவாக அவர் நேற்றைய தினம் யாழ்.மாநகர சபை சட்ட ஆலோகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். #யாழ்மாநகரசபை #சட்டஆலோகர் #நீக்கம்
Spread the love