வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், அதில் சில தளர்வுகளைக் கொண்டுவர பிரித்தானிய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று குறைவாக இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கே இவ்வாறு கட்டுப்பாடுகளைத் தளர்த்த பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த யூன் 8-ம் திகதி முதல் அயர்லாந்து தவிர்த்து வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுகள் வரும் வெளிநாட்டுப் பயணிகளும், பிரித்தானிய பிரஜைகளும் கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
பயணிகள் விடுதிகளிலோ அல்லது வீடுகளிளோ 14 நாட்களுக்குத் தனித்து இருக்க வேண்டும் என்னும் நிலையில் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டினால் பிரித்தானியாவுக்கு வர பலருக்கும் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் யூலை, ஓகஸ்ட் மாதங்கள் பிரித்தானியாவில் சுற்றுலாவுக்கான மாதம் என்னும் நிலையில் இந்தக் கட்டுபாடு விமர்சனத்துக்கு உள்ளானதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டில் தளர்வு கொண்டு வர பிரித்தானியா அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #பிரித்தானியா #தனிமைப்படுத்தல் #தளர்வு #பரிசீலனை #கொரோனா