இந்தியாவில் 9 ஆயிரம் பேரின் உயிரை கொரோனா வைரஸ் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே வீதிவிபத்துக்கள் தொடர்பான மரணங்கள் இந்தியாவில்தான் அதிகளவில் நடக்கின்றன. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் வீதிவிபத்துக்களில் உயிரிழந்து வருகின்றனர்.
சாரதிகளின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மை குடிபோihயில் வாகனம் செலுத்துதல், தலைக்கவசம் அணியாமைஈ ஆசனப்பட்டி அணியாமை போன்றன் வீதி விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய வீதி விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்ற நிலையில் அதனை கொரோனா வைரஸ் ஊரடங்கு நிறைவேற்றியுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கானது வீதி விபத்துக்களிலிருந்து சுமார் 9,000 பேரின் உயிரை காப்பாற்றியுள்ள அதே சமயம் 26,000 பேர் விபத்துக்களில், படுகாயம் அடைவதும் தடுக்கப்பட்டுள்ளது.ஊரடங்கால் வாகன போக்குவரத்து முடங்கியதே இதற்கு முக்கியமான காரணமாகும்.
வீதி பாதுகாப்பு தொடர்பாக, உச்சநீதிமன்ற கமிட்டியிடம், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தொய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #கொரோனா #இந்தியா