முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில், இந்திய இராணுவத்தினரைத் தோற்கடிப்பதற்காகவே , விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதென முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரேமதாஸ ஆட்சிக்கு வந்ததும், இலங்கையிலிருந்து இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கால அவகாசம் வழங்கியதாகவும், இந்திய இராணுவம் இலங்கையின் தேசிய கொடிக்கு பதிலாக, வடக்கு, கிழக்குகென்று தனியான கொடியை அறிவிக்குமாறு, வரதராஜ பெருமாளுக்கு அறிவித்ததாகவும் இதற்கு எதிர்ப்பை தெரிவித்து, பிரேமதாஸ பிரபாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். #இந்தியஇராணுவம் #பிரேமதாஸ #விடுதலைப்புலிகள் #ஆயுதங்கள் #பிரபாகரன்