171
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக்கிற்கும் (Omar Abdul Razzak) இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பு நேற்று 2020.06.29) காலை அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
கொவிட் – 19 தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மாலைதீவு எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில், மாலைத்தீவில் ஹோட்டல் துறையில் தொழில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமையைப் போன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என உயர் ஸ்தானிகர் பிரதமரிடம் அறிவித்துள்ளார்.
மாலைத்தீவில் உள்ள இலங்கையர்களின் தகவல் தொடர்பில் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் கேள்வி எழுப்பினார். வெளிவிவகார அமைச்சின் தகவலுக்கமைய இலங்கை பணியாளர்கள் 15000-20000க்கும் இடையிலானோர் மாலைத்தீவில் பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். #பிரதமர் #மாலைத்தீவு #ஹோட்டல்
Spread the love