கல்முனை நகர மண்டபம் விரைவில் பொது மக்கள் பாவனைக்கு அனுமதிக்குமாறு கோரி கல்முனை மாநகர சபை மாதந்த சபை அமர்வில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.
வழமையான சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மாநகர முதல்வரினால் கல்முனை மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான மாதாந்த கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து கல்முனை நகர மண்டபத்தை மக்கள் பொது பாவனைக்கு விடுக்க கோரி கடந்த கால சபை அமர்வுகளில் கருத்துக்களை முன்வைத்து வந்த மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஷன் அக்தர் இன்றைய மாநகர சபை மாதாந்த அமர்வில் மீளவும் கோரிக்கையையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.
இதன் போது மேலும் தெரிவித்ததாவது
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் பொது மக்களுக்காக நிகழ்வுகளை மற்றும் கூட்டங்களை கலாச்சார நிகழ்வுகளை நடாத்த பொதுமக்கள் பல்வேறு அசெளகரியமான நிலையில் உள்ளனர்.