அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட வெள்ள நீரினால் வேளாண்மையை அறுவடை செய்வதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அயராத முயற்சி காரணமாக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையினால் சேனைக்குடியிருப்பு கிட்டங்கி இராட்சத இயந்திர பம்பிகள் இயங்க ஆரம்பித்துள்ளதுடன் வெள்ள நீரும் வற்ற ஆரம்பித்துள்ளது.
மேலும் இன்று இவ்வாறு இயந்திரம் இயங்க ஆரம்பித்தள்ளமையினால் மதகுகளை மறித்து மண் மூட்டைகள் கடின தகடுகள் கொண்டு அணை போடப்பட்டு வயல்வெளிகளில் உள்ள நீர் மட்டக்களப்பு வாவிக்கு அனுப்பும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும் இந்நிகழ்வில் அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் வீ.ஜெகதீஸனின் துரித முயற்சியின் பலனாக விவசாயிகளின் வெற்ற நீர் பிரச்சினைக்கு குறித்த நீர் இறைக்கும் பம்பிகளின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கும் அவர் சென்று பார்வையிட்டார்.
மேலும் நீர் இறைக்கும் குறித்த இராட்சத பம்பியினை பாவிக்கும் போது அதிகமாக மின் கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டி செலுத்த வேண்டி வரும் என தெரிவிக்கப்படுகிறது. இச்செயற்பாட்டை முன்னெடுக்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 75 பேர் ஒன்றிணைந்து கல்முனை பிரதேச செயலக முன்றலில் செவ்வாய்க்கிழமை(30) மாலை ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.
இந்நிலையில் நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளடங்கலாக கிட்டங்கி இராட்சத நீர்ப்பம்பியினை இயங்க வைத்து வெள்ள நீரை அகற்றுவதற்குரிய பூர்வாங்க வேலையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல வருடங்களின் பிற்பாடு இந்த இயந்திரத்தை இயக்குவதற்கு பரீட்சாத்த நடிவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையினால் அதிகமான மழை நீர் ஓட்டமில்லாமல் வயல் பகுதிகளில் தேங்கி நிற்பதனால் அறுவடை செய்யவிருந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் போயுள்ளதால் 25 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை செய்யப்பட்ட பகுதிகள் அழுகும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.
இதனால் கல்முனை நிந்தவூர் சம்மாந்துறை நாவிதன்வெளி மத்திய முகாம் மற்றும் மண்டூர் விவசாயிகள் இப்பிரச்சினையினை எதிர்கொண்டிருந்தனர்.இந்த விடயம் தொடர்பான நிகழ்வு அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் உள்ளிட்ட தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்பு பிரதிநிதிகளும் கருத்துப் பரிமாறி தீர்வொன்றை பெற நடவடிக்கை ஏற்கனவே தீர்மானித்திருந்தனர். #அம்பாறை #விவசாயிகள் #கிட்டங்கிபம்பி #பரீட்சாத்தம் #வெற்றி