159
(க.கிஷாந்தன்)
கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு புகையிரத எண்ணெய்க் கொள்கலனொன்று இன்று (01.07.2020 ) தடம் புரண்டுள்ளதனால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரதகட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அம்பேவெல மற்றும் பட்டிப்பொல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதத்தின் சரக்கு பெட்டி பகுதியே தடம் புரண்டுள்ளது.
புகையிரதபாதையை சீரமைத்து வருவதாகவும் எனினும் இரவு நேரத்திற்குள் சீரமைத்து மலையக புகையிரதசேவையை வழமைக்கு திருப்பலாம் என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவிக்கின்றது. #மலையக #புகையிரதசேவை #தடம்புரண்டு
Spread the love