அடிமை வாழ்வுதனை ஏற்று
அடுப்பங்கரையில் அமர்ந்தது போதுமடி பெண்ணே..
உனக்கான விடியல் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கையில்
இனியும் வேண்டாம் இந்த அடிமை வாழ்வு….
ஆணும் பெண்ணும் சரி நிகர் எனக் கொள்ளும் இப்பாரினிலே
சமைப்பதும் படுக்கை விரிப்பதும் பெண்ணிற்கே உரிய தொழில்
எனக் கொள்ளும் உலக நோக்கை மாற்றி
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதும்
விண்ணிலும் மண்ணிலும் பல சாதனைகள் புரிவதுவே
பெண்ணின் தொழில் என்பதை உரக்க கூறிடு உலகறியட்டும்…
காட்சிப் பொருள் அல்ல பெண்ணே நீ
குலம் காக்க வந்த குல விளக்கு நீ
சாதிக்க பிறந்த சாதனைப் பெண்ணே
சாய்ந்துவிடாதே எதுவரினும்….
பயந்து ஒதுங்கியதும் பணிந்து போனதும் உன்
மடமைத்தனம் என்பதை உணர்ந்து
இனியாவது எழுந்து வா..
பெண்ணின் பெருமைதனை உலகறியச் செய்திடும்
புதுமைப் பெண்ணாய்…..!!
உ.நித்தியா