போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மேலும் 12 அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் காவல்துறைப் பரிசோதகர் ஒருவரும் உப காவல்துறை பரிசோதகர் ஒருவரும் உள்ளடங்குவதாக குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்துடன் தொடப்புபட்டதாக இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களில் 16 காவல்துறைப அதிகாரிகளும் பொதுமகன் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #போதைப்பொருள் #அதிகாரிகள் #கைது