180
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் கடமையாற்றி சிறப்பாக செயற்பட்ட சி.ஏ.மோகன்றாஸ் அவர்களுக்கான பிரிவு உபசார நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.
இலங்கை நிர்வாக சேவையில் 30 வருடங்களை கடந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ மோகன்றாஸ் இம்மாதம் 7 திகதியுடன் நிர்வாக சேவையில் ஓய்வு பெறுகின்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் ஓய்வு பெறவுள்ள மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அவருடைய மனைவி பிள்ளைகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் திட்டமிடல் பணிப்பாளர்கள் கணக்காளர்கள் பிரதேச செயலக மாவட்ட செயலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெறும் மாவட்ட செயலாளரின் நிர்வாக காலப்பகுதியிலேயே மன்னார் நகர பொது பேரூந்து நிலையம் மற்றும் மன்னார் பிரதேச செயலக காணிகிளை போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் நீண்ட காலமாக புணரமைக்கப்படாமல் காணப்பட்ட மடு உள்ளக வீதி அபிவிருத்தி செய்யப்படதுடன் சிறுபோக செய்கையின் போது ஏழை விவசாயிகளுக்கு நெற்செய்கைக்கு என காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது. #மன்னார் #அரசாங்கஅதிபர் #பிரிவுஉபசாரநிகழ்வு
Spread the love