212
யாழ்.நீர்வேலி பகுதியில் நடந்த மோதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு நபர்களுக்கு இடையில் எற்பட்ட முரண்பாடு, கைகலப்பாக மாறியதில், ஒருவர் , மற்றையவரால் கடுமையாக தாக்கப்பட்டு , படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
இச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்வநாயகம் ஜெயசிறி என்பவரே யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய சாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், உயிரிழந்த நபரை தாக்கியவரை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர். #நீர்வேலி #கொலை #முரண்பாடு
Spread the love