173
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 74 வயதான முதியவர் ஒருவர் மீது காரை மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதனையடுத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் இந்த விபத்து இடம்பெற்றது. செய்யப்பட்ட குசால் மெண்டிஸ் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளிலும் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் குசால் மெண்டிஸ் விளையாடியுள்ளார். #குசால்மெண்டிஸ் #கைது #இலங்கைகிரிக்கெட்
Spread the love