169
வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிகட சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள் , வெலிகட சிறைச்சாலை கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோர் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #வெலிகட #சிறைச்சாலை #கைதி #கொரோனா
Spread the love