142
போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் வசந்த குமார இன்று (07) கடவத்த காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குhவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்ட அவர் கடந்த சில தினங்களாக தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #போதைப்பொருள்ஒழிப்பு #காவல்துறைபரிசோதகர் #சரண்
Spread the love