192
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 0 முதல் 90 மின் அலகுகள் வரை பாவித்த பாவனையாளர்களுக்கு 25 வீத கட்டண சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #மின்கட்டணம் #சலுகை #காலஅவகாசம்
Spread the love