197
யாழ்.பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 03 போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த மூவரும் பயணித்த முச்சக்கர வண்டியும் , டிப்பர் வாகனமும், சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நேற்று மாலை விபத்துக்கு உள்ளாகியது.
கிளிநொச்சியில் இருந்து தேர்தல் நடவடிக்கை தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு சென்று மீண்டும் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த போதே விபத்தில் சிக்கியுள்ளார்கள். குறித்த விபத்தில் சுயேட்சை குழு 03இன் தலைவரான சுந்தரலிங்கம் செல்வகுமார் , வேட்பாளரான யோ.பியதர்சன் ஆகியோரும் , இவர்களுடன் இணைந்து பயணிந்த த. டர்சிகன் என்பவருமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #பூநகரி #சங்குபிட்டி #சுயேட்சைகுழு #விபத்து
Spread the love