இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனையடுத்து அங்கிருந்த கைதிகள் உட்பட 450 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அதேவேளை இன்று காலை மாரவில பிரதேசத்திலும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்டார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். #இலங்கை #கொரோனா #கந்தக்காடு #வெலிகடை