கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மேலும் 196 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த நிலையத்தில் 56 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருந்த நிலையில் மேலும் ; 196 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டதனையடுத்து கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 252 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று அடையாளம் காணப்பட்ட 196 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2350 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1979 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் 360 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா #கந்தகாடு #புனர்வாழ்வுமத்தியநிலையம் #சுகாதாரஅமைச்சு