இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் கைதான கிரிமினல் குற்றவானி விகாஸ் துபே இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு 23 மணிநேரத்தில் வீதி வழியே சென்ற போது தப்பிச் செல்ல முற்பட்ட போது உத்தரப் பிரதேச காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்பூரின் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவல்துறையினரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்ற விகாஸ் துபே நேற்று ம.பி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதை தொடர்ந்து உஜ்ஜைனில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து மத்திய பிரதேச காவல்துறையினர் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் காணொலிக்காட்சிகள் மூலம் அவர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனிடையே, உஜ்ஜைனில் விகாஸ் சிக்கிய தகவலறிந்த கான்பூர் காவல்துறையினர் உ.பியின் அதிரடிப் படையுடன் மத்தியப் பிரதேசம் சென்று அவர்களும் காணொலிகாட்சி மூலம் விகாஸ் துபேயை டிரான்ஸிட் ரிமாண்ட் மூலம் தன் பொறுப்பில் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், உ.பியின் கான்பூருக்கு சற்று தொலைவு முன்பாக இருக்கும் எனும் இடத்தில் விகாஸ் துபேயை அழைத்துச் சென்ற வாகனம் வீதியில்; தடுமாறி கவிழ்ந்துள்ளதாகவும் அப்போது காவல்துறையினரின் துப்பாக்கியை பறித்து சுட்டுவிட்டு விகாஸ் தப்ப முயன்றதாகவும் இதனால், அங்கிருந்த உ.பியின் அதிரடி படையினரால் விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விகாஸ், கான்பூரின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். #விகாஸ்துபே #என்கவுண்டர் #அதிரடிப்படை