அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதன் முதலாக முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் அமெரிக்காவில் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ட்ரம்ப் இதுவரையில் பொதுவெளியில் முகக்கவசம் அணிந்து தோன்றியதே இல்லை.
அத்துடன் தான் முகக்கவசம் அணிய மாட்டேன் என தெரிவித்ததுடன் முகக்கவசம் அணிந்ததற்காக தனது போட்டியாளரான ஜோ பிடனை கேலி செய்திருந்தார். இந்தநிலையில் ஜூலை 11 ஆம் திகதி வோஷிங்டனுக்கு வெளியே வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு சென்ற ட்ரம்ப், சுகாதாரப் பணியாளர்களை சந்தித்துள்ளர்h. அதற்காக வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டபோதே அவர் அணிந்திருந்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர்;, தான் ஒருபோதும் முகக்கவசங்களுக்கு எதிராக இருந்ததில்லை. ஆனால் அதற்கென ஒரு நேரமும் இடமும் இருப்பதாக நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் அமெரிக்காவில் 66,528 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது வரை அமெரிக்காவில் மொத்தம் 1 லட்சத்து 37,000 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது #முகக்கவசம் #ட்ரம்ப் #கொரோனா