கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீன அரசும் உலக சுகாதார அமைப்பும் உண்மைகளை மூடி மறைத்துவிட்டன என்று ஹொங்கொங் விஞ்ஞானியான லீ மெங் யான் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டபோது வைரஸ் குறித்த உண்மைகளை வெளியிட்ட மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திடீரென காணாமல் போயிந்தனர்.
சீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட ஹொங்கொங்கை சேர்ந்த மருத்துவர் லீ மெங் யான். ஹொங்கொங ;பல்கலைக்கழக விஞ்ஞானியாவார், இவர் வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்து வந்த அவர் ஹொங்கொங்கில் இருந்து தப்பிச் சென்று தற்போது அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
அங்கு தனியார்தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலியே லீ மெங் யாங் மேற்கணடவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் வுஹானில் கொரோனா வைரஸ் பரவிய போது, அந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்ய சீனாவுக்கு செல்ல முயன்ற போதும் சீன அரசு அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து வுஹானில் பணியாற்றும் சில மருத்துவர்களை தொடர்பு கொண்டபோது , மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுகிறது. குடும்பம், குடும்பமாக வைரஸ் தொற்றுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
சீன அரசும் உலக சுகாதார அமைப்பும் வைரஸ் குறித்த உண்மைகளை மூடி மறைத்தன. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவவில்லை என்று வாதிட்டதுடன் பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டன.
வைரஸ் குறித்த விவரங்களை தனது துறையின் மூத்த விஞ்ஞானியிடம் தெரிவித்தபோது அவர், ‘சிவப்பு கோட்டை தொடாதே’ என்று என்னை எச்சரித்தார். வைரஸ் குறித்த உண்மைகளை சொல்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
உலக சுகாதார அமைப்பு, சீன அரசு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல், முறைகேடுகள் எனக்கு நன்றாகவே தெரியும். எனினும் வைரஸ் குறித்து மக்களிடம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை என்னால் ஏற்க முடியவில்லை.
உண்மையை சொல்வதற்காக ஹொங்கொங்கில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பி வந்தேன். எனது உயிருக்கு இன்றளவும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சீன அரசு முயற்சிக்கிறது. என்னையும் எனது குடும்பத்தினரையும் குறி வைத்து சைபர் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. ஹொங்கொங் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எனது பக்கம் நீக்கப்பட்டுள்ளது என லீ மெங் யாங் தெரிவித்துள்ளார். #கொரோனா #மனிதர்களிடமிருந்து #உலகசுகாதாரஅமைப்பு #லீமெங்யான் #விஞ்ஞானி